திங்கள், 18 ஜூன், 2018

``நான் ஹீரோயின் ஆவேன்னு அம்மா நினைச்சதே இல்லை!” - `தடக்’ ஜான்வி கபூர் பெர்சனல்

``நான் ஹீரோயின் ஆவேன்னு அம்மா நினைச்சதே இல்லை!” - `தடக்’ ஜான்வி கபூர் பெர்சனல்

PC: instagram.com/janhvikapoor
ஜான்வி கபூர்..நடிகை ஸ்ரீதேவியின் மகள்; தற்போது பாலிவுட்டின் டாக் ஆப் தி டவுன்!  கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஊடக வெளிச்சத்திலும் சமூகவலைதளங்களிலும் அவ்வப்போது அப்டேட் அளித்தபடி இருந்தவர், மராத்தியில் சூப்பர்-டூப்பர் ஹிட் அடித்த `சாய்ராட்’ என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் `தடக்’ திரைப்படம் மூலம், பாலிவுட்டில் என்ட்ரி ஆகவிருக்கிறார். வரும் ஜூலை மாத 20-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாக, ஏற்கெனவே இந்தப் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பை இது இரட்டிப்பாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். ஒரிஜினல் படத்தில் பெரிதும் பேசப்பட்டது அந்த நாயகியின் கதாபாத்திரம்..இந்த எதிர்பார்ப்பை ஜான்வி பூர்த்தி செய்வாரா என்ற கேள்வியுடன், அவரை பற்றி சில சுவாரஸ்சிய தகவல்கள்.
PC: instagram.com/janhvikapoor
*1997 ம் ஆண்டு மார்ச் 6 ம் தேதி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூருக்கும், நடிகை ஸ்ரீதேவிக்கும் பிறந்த மூத்த மகள்தான் ஜான்வி கபூர். தன் பள்ளிப்படிப்பை திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் முடித்திருக்கிறார். ஆங்கிலம் மற்றும் வரலாறு பாடத்தில் ஆர்வம் கொண்டவர், மற்ற பாடத்தில் எல்லாம் `ஜஸ்ட் பாஸ்’ ரகம்தானாம். பள்ளியில் அட்டெண்டன்ஸ் விஷயத்தில் ஜான்வி செம வீக். வெறும் 30% அட்டென்டன்ஸ் கொடுத்துவிட்டு மற்ற நேரங்களில் அம்மா-அப்பாவுடன் உலகைச் சுற்றிக்கொண்டிருப்பது இவரின் ஹாபி. 
PC: instagram.com/janhvikapoor
*பள்ளிப் பருவத்தில் தொடங்கிய இந்தப் பயணக் காதல், இப்போது அவரை ஒரு `ட்ராவலராக’வே மாற்றியிருக்கிறது. ஆம்! ஊர் சுற்றுவதென்றால் ஜான்விக்குக் கொள்ளை ப்ரியமாம்!
PC: instagram.com/janhvikapoor
* பள்ளிப் படிப்பை முடித்த பின், இவருக்கு நிறையப் படிக்கவேண்டும் என்று ஆசை இருந்தது. இத்தாலியில் கலை வரலாறு  (Art History), லண்டனில் ஃபேஷன் ( Fashion), அமெரிக்காவில் நடிப்பு ( acting) எனப் பட்டியலிட்டிருந்தார். ஆனால், கலிபோர்னியாவிலுள்ள லீ ஸ்ட்ராஸ்பேர்க் தியேட்டர் அண்ட் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்புக் கலை படித்துள்ளார். 
PC: .instagram.com/janhvikapoor
* ஆனால்,  ஜான்வி சினிமாவில் நடிப்பதில், ஸ்ரீதேவிக்கு அவ்வளவு விருப்பமில்லை என இருவருமே கூறியிருக்கின்றனர். ஒருமுறை ஸ்ரீதேவியிடம் ஜான்வி சினிமாவில் நடிப்பது பற்றி கேட்க, ``அவர் சினிமாவில் நடிப்பதைவிட, திருமணம் செய்துகொண்டு செட்டிலானால் நான் இன்னும் சந்தோஷப்படுவேன்”, என்று கூறினார். அதே நேரம் ஜான்வியும்... ``என் அம்மா நான் ரொம்ப அமைதியான நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைத்தார். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரையில், நான் மிகவும் குழந்தைத்தனமாக, வெகுளியாக இருக்கிறேன் என்று நினைத்தார். அதனால்தான், நான் நடிகையாக வேண்டும் என அவர் ஒருபோதும் நினைத்ததே இல்லை”, என்று தெரிவித்தார்.
PC: instagram.com/janhvikapoor
*ஜான்வி அம்மா செல்லம். அவர் காலையில் எழுந்ததும், முதலில் தேடுவது அவர் அம்மாவைத்தானாம். அவருக்கு அடிக்கடி அம்மா உணவும்  ஊட்டிவிடுவாராம். அம்மாவின் மறைவுக்குப் பின், இந்த விஷயங்களையெல்லாம் ஜான்வி அதிகமாக மிஸ் செய்ய, தற்போதும் ஶ்ரீதேவியின் இடத்தை தன் அக்காவுக்காக நிரப்பிக்கொண்டிருக்கிறார் குஷி கபூர். இதை ஜான்வியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.  

*ஶ்ரீதேவி, ஜான்வி, குஷி... இவர்கள் மூவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று... விதவிதமான உடைகள் அணிவது! போனி கபூரும், தன் மனைவியும் மகள்களும் என்ன உடை  அணிகிறார்கள் என்பதை எப்போதும் ஆவலுடன் பார்ப்பாராம். ஒருவேளை அவர்கள் அணிந்த ஆடைகள் தனக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றினால் அதையும் போனி கபூர் எடுத்துச் சொல்வாராம். எந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும், தன் மனைவி, மகள்களை புகைப்படம் எடுத்து சந்தோஷப்படுவது போனி கபூரின் வழக்கமான செயல்களில் ஒன்றாம்.  
*நடிகை ஸ்ரீதேவி இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு, `தடக்’ திரைப்படத்தில், ஜான்வி நடித்த காட்சிகளைப் பார்த்திருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு, ஜான்விக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறாராம். குறிப்பாக, ஜான்வியின் மேக்கப் அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தாராம். ``உன் கண்களில் பூசப்பட்டிருந்த மஸ்காரா செயற்கையாக இருக்கிறது”, என்று ஜான்வியிடம் கூறினாராம் ஸ்ரீதேவி. 
தன் நடிப்பால் ரசிகர் ரசிகைகளை கட்டிப் போட்டவர் நடிகை ஶ்ரீதேவி. அவரின் மகள் என்கிற பெரிய எதிர்பார்ப்போடு களத்தில் இறங்கியிருக்கிற ஜான்வியின் நடிப்பு பற்றி `தடக்' பார்த்த பிறகே சொல்லமுடியும். 
வாழ்த்துகள் ஜான்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக