சர்கார் படத்தில் விஜய், வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து வைரலாகும் தகவல்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் விஜய், வரலட்சுமியின் கதாபாத்திரங்கள் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய நிலையில், படத்தை பற்றி புதுப்புது தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன.
இதில் தற்போது, விஜய் மற்றும் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படத்தில் வரலட்சுமி முதலமைச்சரின் மகளாக நடிப்பதாகவும், வெளிநாட்டில் படிக்கும் வரலட்சுமி, விஜய்யின் தோழியாக நடித்துள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. எனினும் இந்த தகவல் குறித்து படக்குழு பதிலோ, மறுப்போ தெரிவிக்கவில்லை.

மற்றொரு தகவலின்படி படத்தில் வரலட்சுமி எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக