பிக்பாஸையே விட்டு வைக்கல டிக்டிக்டிக் படத்தையா விடப்போறங்க! தமிழ்பட அட்ராசிட்டி
கடந்த 2010-ம் ஆண்டில் சிவா நடிப்பில் வெளியான படம் 'தமிழ்ப்படம்'. ஸ்பூஃப் ஜானரில் (நய்யாண்டி) வெளிவந்திருந்த இந்தப் படம் தமிழ் திரைப்படங்களில் பின்பற்றும் ஃபார்முலாக்களையும், பல படங்களின் சீன்களையும் கிண்டலடித்ததோடு, பல நடிகர்களையும் நய்யாண்டி செய்திருந்தது.
இப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். அதுவரையிலான தமிழ் திரைப்படங்களிலிருந்து சற்று வித்தியாசமாக மேற்கொள்ளப்பட்ட அமுதனின் அந்த முயற்சி வெற்றியைத் தந்தது. சினிமா ரசிகர்களும் படத்தை வெகுவாக ரசித்தனர்.
இதையடுத்து 'தமிழ்ப்படம் 2.0' என்ற பெயரில் 'தமிழ்ப்படம்' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சிவாவுக்கு ஜோடியாக திஷா பாண்டே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் தோன்றுகிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டரில் தமிழ்நாட்டு அரசியலைக் கலாய்த்து வெளியிட்டிருந்தது படக்குழு. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மெரினாவில் தியானம் செய்தது போன்று சிவா அமர்ந்து தியானம் செய்யும் காட்சி போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரிக்கச் செய்திருந்தது.
இதனையடுத்து படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், டீஸர் வெளியிடப்பட்டது. இதில் அஜித், விஜய், விஷால், விஜய் சேதுபதி என ஒருவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் கலாய்த்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில், தாடி பாலாஜி, நித்யா, மும்தாஜ் இடையே நடந்த வெங்காயப் பிரச்னையை கலாய்த்தும் போஸ்டர் வெளியிட்டனர். இதில் எனக்கு வெங்காயமே தேவையில்லை நான் அப்படியே சாப்பிடுவேன் என பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த படத்தின் 17-வது போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இதில் ஜெயம் ரவி நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் டிக்டிக்டிக் படத்தை கலாய்கும் விதத்தில் அமைத்துள்ளனர்.
விண்வெளியில் லுங்கி கட்டிக்கொண்டு சீட்டு ஆடுவது போன்று போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.
இந்த படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'தமிழ்படம் 2' படத்தின் 17-வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக