குட்டுடைந்தது நடிகை ரேகாவின் 50 வருட இரகசியம், அடடே! இதுதான் விஷயமா.
நடிகை ரேகா தனது 13, 14 வயதிலேயே திரையுலகில் அறிமுகமாகிவிட்டார். இவர் முதன்மை நாயகியாக நடித்த முதல் திரைப்படம் ஆப்ரேஷன் ஜாக்பாட் நல்லி சி.ஐ.டி. 999. இந்த படத்தில் இவர் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து இந்தி சினிமாவில் நுழைந்து, இந்தி திரைத்துறை வரலாற்றில் மறக்க முடியாத நடிகையாக உருமாறினார் ரேகா.
ஜெமினி கணேஷன் மற்றும் புஷ்பவல்லி தம்பதியினருக்கு மகளாக பிறந்த ரேகா. இவர் தான் வீட்டின் மூத்த வாரிசு. சினிமாவில் அறிமுகமானதில் இருந்து, இன்று வரை ரேகா அதே அழகு, அதே உடல் அமைப்புடன் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் விஷயமாகும். அப்படி என்ன இரகசியம் அது... இவர் மட்டும் வருடங்கள் ஓடினாலும் அழகு குறையாமல் இருக்கிறாரே என்று எண்ணியவர்களுக்கு பதில் கிடைத்துவிட்டது. நடிகை ரேகா பின்பற்றி வரும் அந்த அழகு மற்றும் ஆரோக்கிய இரகசியங்கள் இது தானாம்...
தண்ணீர்!
சரியான அளவு நீரை தினமும் பருகுவதில் கவனமாக இருக்கிறார் நடிகை ரேகா. அதாவது நாளொன்றுக்கு 10 -12 டம்ளர் நீர் குடித்துவிடுகிறார். இது நாள் உடல் நீர்வறட்சி ஏற்படமாலும், சருமம் நச்சுத்தன்மை அதிகரிக்காமலும் காக்க முடிகிறது. ரேகாவின் பிரகாசமான அழகிற்கு முதன்மை காரணம் இதுதானம்.
உறக்கம்!
சீக்கிரமாக படுக்கைக்கு உறங்க செல்வது, சரியான நேரத்தில் அதிகாலை எழுந்துவிடுவது... தேவையான அளவு சீரான தூக்கம் பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை ரேகா. இது தான் அவரை நாள் முழுவதும் ஆரோக்கியமாக, ஃபிட்டாக, அழகாக, எனர்ஜிட்டிகாக இருக்க உதவுகிறது.
உணவு!
ஆரோக்கியத்தை சரியாக பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு போதிய ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ரேகா. தனது ஆரோக்கியம் மற்றும் அழகிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை ரேகா சரியான அளவு எடுத்துக் கொள்கிறார். ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பானங்களை அறவே தவிர்த்துவிடும் இவர். வறுத்த மற்றும் அதிகமாக எண்ணெய் அல்லது ஓவர் குக் செய்யப்பட்ட உணவுகளை தொடுவதே இல்லையாம்.
அரோமா மற்றும் ஆயுர்வேதிக்
அரோமாதெரபி மற்றும் ஆயுர்வேதா ஸ்பா ட்ரீட்மெண்ட்டும் எடுத்துக் கொள்கிறார் நடிகை ரேகா. பண்டைய கால அழகு குறிப்புகளில் அதிக கவனம் கொண்டிருப்பவர் ரேகா. அதனால் தான் ஆயுர்வேதா மற்றும் அரோமாதெரபி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார். இதனால், இந்த சிகிச்சைகளை தனது வீட்டிலேயே செய்துக் கொள்கிறார் நடிகை ரேகா.
ஒழுக்கமான வாழ்க்கை!
நடிகை ரேகா கடைப்பிடிக்கும் ஒழுக்கமான வாழ்க்கையும் அவரது ஆரோக்கியம் மற்றும் அழகிற்கு துணை நிற்கின்றன. மகிழ்ச்சியாக, மன அழுத்தம் இன்றி இருப்பதன் மூலமாக அவர் தனது வெற்றி, உடல்வனப்பு மற்றும் குணாதியங்களை சரிவர பார்த்துக் கொள்கிறார். கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒழுக்கமான வாழ்க்கை தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.
ஹேர்பேக்!
நெல்லிக்காய், சீகக்காய், வெந்தையம் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தனது கூந்தல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துகிறார் நடிகை ரேகா. மேலும், இயற்கையான முறையில் தென், தயிர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கொண்டு வாரத்திற்கு ஒருமுறை கூந்தலை அலாசி பராமரிக்கிறார்.
இதனால் இவரது கூந்தல் 63 வயதிலும் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. மேலும், கூந்தல் ஈரமாக இருக்கும் போது தலை சீவும் பழக்கம் நடிகை ரேகாவிடம் இல்லவே இல்லை. முழுவதுமாக கூந்தல் ஈரம் காய்ந்த பிறகே தலை வாருகிறார்.
உடற்பயிற்சி!
தினமும் காலை எழுந்ததும் 10- 15 நிமிடம் தவறாமல் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பாலிவுட்டின் ஐகானிக் பியூட்டி என்று புகழப்படும் நடிகை ரேகா. மேலும், இவர் யோகாவை அதிகமாக நேசிக்கும் ரேகா.. தினமும் யோகா மற்றும் தியானம் செய்வதை நீண்ட காலமாக தனது அன்றாட பழக்கத்தில் ஒன்றாக பின்பற்றி வருகிறார்.
நடனம்!
நடிகை ரேகா ஒரு சிறந்த நடனக் கலைஞர் என்பது அவரது திரையில் கண்ட அனைவரும் அறிவார்கள். ஆனால், இப்போதும் கூட நடனமாடுவதை விடாமல் தினமும் விரும்பி செய்து வருகிறார் ரேகா. இது போல தன் வீட்டு வேலைகள், தோட்ட பராமரிப்பு என உடலை சோர்வடையாமல் வைத்துக் கொள்ள போதுமான வேலைகளை அவரே செய்துக் கொள்கிறார்.
சைவம்!
நடிகை ரேகா சைவ உணவை விரும்பி உண்பவர். இந்திய உணவு மசாலாக்களை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்விறார். மாதுளை, நட்ஸ், பாதாம், வால்நட், காய்கறி பழங்களை தினமும் வேண்டிய அளவு சேர்த்துக் கொள்கிறார். இதனால் அவரது ஆரோக்கியம், சருமம் மற்றும் கூந்தலுக்கு தேவையான சத்துக்கள், போஷாக்கு கிடைக்கின்றன.
மீல்ஸ்!
தான் உண்ணும் உணவில் ருசி பார்ப்பதை விட, அதில் ஊட்டச்சத்து சரியாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறார் நடிகை ரேகா. இவர் ருசி மற்றும் ஊட்டச்சத்து இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். தினமும் தனது மீல்ஸ்ல் தவறாமல் காய்கறி, தயிர், சப்பாத்தி, சாலட் போன்றவற்றை சேர்த்துக் கொள்கிறார். இவை தான் இவரது சருமம் அழகு மற்றும் இளமையான தோற்றத்திற்கு முக்கியமான காரணங்களாக திகழ்கின்றன.
நீராகாரங்கள்!
பாலிவுட்டின் திவா என்று புகழப்படும் நடிகை ரேகா அதிகமாக நீராகாரங்களை சேர்த்துக் கொள்கிறார். தண்ணீர், தயிர், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் உடல் எடை கூடுவதில்லை. மாறாக இவரது அழகின் எடை மட்டும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் தான் இன்றும் இளமையாக மட்டுமின்றி, தனது உடல் வடிவத்தையும் அப்படியே பேணிக்காக்கிறார் நடிகை ரேகா.
டின்னர்!
முடிந்தவரை 7.30க்கே தனது இரவு உணவை உட்கொண்டு விடுகிறார் நடிகை ரேகா. எதை உண்ண வேண்டும், அதை எப்படி உண்ண வேண்டும், எவ்வளவு உண்ண வேண்டும் என்று அறிந்த ரேகாவிற்கு அந்த உணவை எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்பதும் சரியாக தெரிந்துள்ளது.
ஆகவே... அவர் எப்படி இத்தனை ஆண்டுகளாகியும் அதே அழகுடன், உடல் வடிவத்துடன் இருக்கிறார் என்று கேட்பது எளிது... ஆனால், அதற்காக அவர் தொடர்ந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக சீரான உணவு பழக்கம், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றி வந்திருக்கிறார்.
இது கொஞ்சம் கடினமாக தேர்ந்தாலும், பழகிக் கொண்டால் அனைத்துமே எளிதானது தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக