அனுஷ்காவுக்கு ரகசிய திருமண ஏற்பாடுகள் - என்ன காரணம்?
37 வயதாகும் அனுஷ்காவுக்கு ரகசியமாக திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2005-ல் சினிமாவுக்குள் வந்து தமிழ், தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் வந்தும் திறமையை நிரூபித்தார்.
கடைசியாக அவர் நடித்து பாகமதி படம் வந்தது. இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டன.
அனுஷ்காவும், தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர் என்றும் கிசுகிசுக்கள் பரவின. அதனை இருவரும் மறுத்தார்கள். இதற்கிடையில் அனுஷ்காவுக்கு பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். தற்போது மாப்பிள்ளை முடிவாகி விட்டதாகவும், அவருடன் அனுஷ்காவுக்கு ரகசியமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது என்றும் தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.
திருமணத்துக்கு பிறகு படங்களில் அவர் நடிப்பாரா? என்று தெரியவில்லை. உடல் எடை கூடிவிட்டதால் இளம் நடிகர்கள் அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கின்றனர். மூத்த நடிகர்களும் ஒதுக்குகிறார்கள். எனவேதான் திருமணம் செய்து குடும்பம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக