மீண்டும் நயன்தாரா உடன் டூயட் ஆடும் காமெடி நடிகர்
தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் வளர்ந்தவர் காமெடியன் யோகிபாபு. குண்டான உருவம், சுருள் முடி, சரளமாக அடிக்கும் கமெண்ட் என திரையில் அதகளம் பண்ணுகிறார். இவரை பார்த்த உடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் குபீர் சிரிப்பு வருகிறது.
செந்தில், வடிவேல் ஆகியோருக்கு பிறகு பார்த்த உடன் சிரிப்பை வரவழைக்கும் காமெடியனாக யோகிபாபு உருவெடுத்து வருகிறார். விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
இப்பாடலில் அழகு நயன்தாராவிடம் காதலுக்கு சம்மதம் கேட்டு நடனம் ஆடியும், க்யூட் ரியாக்சன் கொடுத்து அசத்தியிருப்பார் யோகிபாபு. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரண்டானது. `கோலமாவு கோகிலா' படத்தில் நடிகர் யோகிபாபுவின் அசாத்திய நடிப்பை வியந்து பாராட்டியுள்ளார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் பிசியான காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, `கோலமாவு கோகிலா' படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நயன்தாரா அடுத்து ஒரு திகில் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவை காமெடியனாக நடிக்க வைக்க இயக்குனரிடம் சிபாரிசு செய்துள்ளார். யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தாலும் நயன்தாராவுக்காக சம்மதித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
`கோலமாவு கோகிலா' படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க யோகிபாபு ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் வளர்ந்தவர் காமெடியன் யோகிபாபு. குண்டான உருவம், சுருள் முடி, சரளமாக அடிக்கும் கமெண்ட் என திரையில் அதகளம் பண்ணுகிறார். இவரை பார்த்த உடனே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் குபீர் சிரிப்பு வருகிறது.
செந்தில், வடிவேல் ஆகியோருக்கு பிறகு பார்த்த உடன் சிரிப்பை வரவழைக்கும் காமெடியனாக யோகிபாபு உருவெடுத்து வருகிறார். விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
இப்பாடலில் அழகு நயன்தாராவிடம் காதலுக்கு சம்மதம் கேட்டு நடனம் ஆடியும், க்யூட் ரியாக்சன் கொடுத்து அசத்தியிருப்பார் யோகிபாபு. இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரண்டானது. `கோலமாவு கோகிலா' படத்தில் நடிகர் யோகிபாபுவின் அசாத்திய நடிப்பை வியந்து பாராட்டியுள்ளார் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் பிசியான காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, `கோலமாவு கோகிலா' படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நயன்தாரா அடுத்து ஒரு திகில் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவை காமெடியனாக நடிக்க வைக்க இயக்குனரிடம் சிபாரிசு செய்துள்ளார். யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தாலும் நயன்தாராவுக்காக சம்மதித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக