சென்னையில்.. மெர்சல் வசூலை மிஞ்சியது காலா..!
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம், நேற்று வெளியானது. முதல் நாளில் ரஜினி படத்துக்கான வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது. இதனால் வசூல் நிலவரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதையும் தாண்டி, காலா படம் நல்ல வசூலை பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. திரைப்படம் வெளிவான நேற்று, சென்னையில் மட்டும் காலா படம் ரூ.1.76 கோடி வசூலித்தது. இதற்கு முன்பு விஜய்யின் மெர்சல் படம் ரூ.1.52 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது.
எனவே சென்னை நிலவரப்படி காலா படம் தான் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது.ஆனால் இது ரஜினி படம் என்பதால், இந்த தொகை குறைவு தான் என தயாரிப்பு தரப்பு கவலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதுமான நிலவரத்தை பொறுத்த வரை, சுமார் 30 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.கர்நாடகாவில் படம் சரியாக ரிலீஸ் செய்யப்படாததால், வசூலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக