கிரிஜா வின் வாரிசு! சலீமா
சிவாஜியின் ‘மனோகரா’ படத்தை மட்டும் அல்ல அப்படத்தில் சிவாஜியுடன் நடித்த பல நடிகர்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அவர்களில் ஒருவர்தான் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த கிரிஜா. ‘திரும்பி பார்’, ‘இரு சகோதரிகள்’ என தொடர்ந்து தமிழில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவரது மகள் சலீமா, தமிழில் அறிமுகமாகிறார்.
தனது அம்மாவுடன் படப்பிடிப்புக்கு செல்வது, படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும் அம்மாவிடம் படப்பிடிப்பு குறித்து கேட்டு தெரிந்து கொள்வது என சிறு வயதில் இருந்தே சினிமா மீது பேரார்வம் கொண்டவரான சலீமா, மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்ததோடு, 150க்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.
மலையாளம், கன்னடப்படங்களில் நடித்துள்ள சலீமா, ‘நெல்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
மலையாளத்தில் பிசியாக இருந்தபோது தமிழ் சினிமாவில் அவ்வளவாக கவனம் செலுத்தாத இவர், தற்போது முழுக்க முழுக்க தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தப் போகிறாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக