மளையாளத்தில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
நயன்தாரா முதலில் மளையாளத்தில் அறிமுகமாகி பின்பு ஐயா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார் . பின்னர் தமிழில் மார்க்கெட் உச்சம் தொட ஆரம்பித்ததும் மளையாளத்தில் ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே அவ்வப்போது தலை காட்டி வருகிறார் .
இந்நிலையில் தற்போது தன் தாய்மொழியான மளையாளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். நிவின் பாலியின் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். மற்றொரு படத்தில் கதாநாயகன் இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த படத்தின் கதை அமைந்துள்ளது.
தற்போது வரை கதாநாயகிகளில் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது நயன்தாராவுக்கு மட்டும்தான் . இடையில் சிறிது காலம் திரிஷா போட்டியாக இருந்தார். திரிஷா எவ்வளவு முயன்றும் நயன்தாரா இடத்தை பிடிக்க முடியவில்லை. காரணம் நயன்தாராவின் கடின உழைப்பும் அவரது திறமையும் என்றால் அது மிகையாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக