முதலில் ரஜினி இப்போது அஜித் - காலா லெனின்
‘காலா’ படத்தில் பெரும்பாலும் சிவப்பு சட்டையுடன், லெனின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மணிகண்டன். ரஜினியின் இளைய மகனாக, போராட்ட குணத்துடன் மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு முன் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். இதற்கு முன் ‘காதலும் கடந்து போகும்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களிலும் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
மணிகண்டன் வெறும் நடிகர் மட்டுமல்ல, வசனகர்த்தாவும் கூட. கடந்த ஆண்டு வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப் படத்தின் மிகப்பெரிய பிளஸ் வசனங்கள் தான். அந்த வசனங்களை எழுதியவர் இந்த மணிகண்டன் தான்! தற்போது வெளியாகியுள்ள செய்திகளின் படி, சிவா - அஜித் இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் ஸ்கிரிப்டிங் குழுவில் பணியாற்றி வருகிறார் மணிகண்டன்.
அதனால் ‘விஸ்வாசம்’ படத்திற்கும் இவரே வசனங்கள் எழுதுகிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அஜித் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். ஏனென்றால் வலுவான வசனங்களை எழுதுபவர் மணிகண்டன், அதுவும் அஜித்துக்கு என்றால் சொல்லவா வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக