தந்தையாக, தாத்தாவாக ரஜினியின் வேறு முகத்தை பற்றி கூறும் ஐஸ்வர்யா தனுஷ்! #Rajini Life Facts
உலக ரசிகர்களால் விரும்பப்படும் வெகு சில நட்சத்திரங்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினி எப்படி பிறந்தார், வளர்ந்தார், சூப்பர் ஸ்டாராக உருவானார், அவரது அரசியல் நிலைப்பாடு என்ன என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால், சினிமா திரை, மேடை பேச்சுக்கள், சமூகத்தின் ஒரு அடையாளம் என்று தவிர்த்து... நான்கு சுவர்களுக்கு ரஜினி என்ற மனிதரின் பிம்பம் எப்படியாக இருக்கும் என்று அவரது குடும்பத்தாரை தவிர வேறு யாருக்கும் தெரியாது.
இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பயிற்சி பெற்ற பாடகர், நடன கலைஞர், இதெல்லாம் போக ஐ.னாவில் பெண் சமவுரிமை, பெண்கள் முன்னேற்றம் குறித்து வாதாடியும் வருகிறார் 36 வயதான ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ். இவர் தனது சூப்பர் ஸ்டார் தந்தை பற்றியும், தன் பிள்ளைகளின் தாத்தா பற்றியும் சில நெகிழ்ச்சியான விஷயங்களை சமீபத்தில இன்டர்நெட் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
குழந்தை பருவத்தில்..
குழந்தை பருவத்தில் தந்தையுடன் அதிக நேரம் செலவழித்தது கிடையாது. அவர் அப்போது வருடத்தில் ஏழெட்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதாவது வருடத்தில் எல்லா நாட்களும் அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு வந்தார். ஆகவே, குழந்தை பருவத்தில் ஒரு மகளாக, தந்தையுடனான தருணங்களை நாங்கள் பெரிதும் அனுபவித்தது இல்லை.
சூப்பர் ஸ்டார் தாக்கம்...
சூப்பர் ஸ்டாரின் பிள்ளைகள் என்ற பெயர் இருந்தது. ஆனால், அந்த தாக்கம் என்ன என்பதை மிக தாமதமாக தான் நாங்கள் அறிந்தோம். எங்களை மீடியா வெளிச்சத்தில் இருந்து மறைத்தே வைத்திருந்தனர் எங்கள் பெற்றோர்.
அம்மாவாக...
ஒரு அம்மாவாக இருப்பது நிஜமாவே கடினமான ஒன்று தான். என் குழந்தைகள் மிகவும் இளையவர்கள். அவர்கள் இப்போதே செல்போன் மீது விருப்பம் கொண்டிருக்கிறார்கள். என் பெரிய மகன் ஏற்கனவே மொபைல் வேண்டும் என்று அடம்பிடிக்கிறான். ஆனால், 11, 12வது சென்ற பிறகு தான் செல்போன் வாங்கி தருவேன் என்று கூறிவிட்டேன்.
ஊர் சுற்றலாம்
அவன் வகுப்பில், அவன் வயதொத்த அனைவரும் செல்போன் வைத்திருக்கிறார்கள் என்று அவன் கூறுகிறான். ஆனால், அவன் நண்பர்களுடன் எங்கே வெளியே செல்ல வேண்டும் என்றாலும் நான் அனுமதி மறுக்க மாட்டேன். அவன் எங்கே வேண்டுமானாலும் பயணிக்கலாம். ஆனால், அவனுக்கு என்ன தேவை, தேவை இல்லை என்பதை பெற்றோராக நான் தான் தேர்வு செய்ய வேண்டும்.
பெற்றோர் நலன்
இன்றைய காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்தாலும் சரி, சாதாரண ஆளாக இருந்தாலும் ஸசரி பெற்றோராக இருப்பது மிகவும் கடினம். நாம் எதற்கு எஸ் சொல்ல வேண்டும், எதற்கு நோ சொல்ல வேண்டும்... குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு எதற்கு பதில் அளிக்க வேண்டும், எதற்கு பதில் அளிக்க கூடாது என்று யாருக்கும் தெரிவதில்லை. ஆனால், குழந்தைகள் கேள்வி கேட்பது ஆரோக்கியமான விஷயம் என்று நான் கருதுகிறேன்.
கேள்விகள்!
குழந்தைகள் கேள்வி கேட்கும் போது தான் நிஜமாகவே வளர்கிறார்கள். அவர்களுக்கு அந்த கேள்விக்கான தெளிவான, புரியும் படியான பதிலை அளிக்க வேண்டும். என் மகன் பகுத்தறிவு நிறைந்த பதிலை எதிர்பார்க்கிறான். அவனுக்கு அந்த பதிலை நான் அளித்தே ஆகவேண்டும். அவன் பதிலை வேண்டுவது சரியானது. அதற்கான சரியான பதிலை அளிப்பதன் மூலமாக தான் அவனுக்கான சரியான பாதையை, வழிக்காட்டுதலை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.
தாத்தா, பாட்டியாக
அப்பாவும், அம்மாவும் அவர்களுடன் நிறைய நேரம் செலவு செய்கிறார்கள். அம்மா நிறைய சலுகைகள் தருவார். அன்பாக நடந்துக் கொள்வார். அப்பாவுக்கு அவர்களுடன் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும் என்று விருப்பம். இந்த நிலையை இருவருமே விரும்புகிறார்கள். இப்போது பேரக்குழந்தைகளுக்கு பின்னால் ஓடும் வயதல்ல, ஏனெனில் அவர்கள் வளர்ந்துவிட்டனர்.
ஓய்வு!
கண்டிப்பாக அப்பா ஒரு கட்டத்தில் ஓய்வு எடுக்க வேண்டியது கட்டாயம். தனது குடும்பத்துடனான நேரத்தை அதிகம் இழந்துள்ளார் அப்பா. இது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், மக்கள் அப்பா மீது வைத்திருக்கும் பாசம்., ரசிகர்களை அப்பா மகிழ்விக்கும் விதம் என அப்பாவின் வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்கிறது.
அப்பா உடனே இதிலிருந்து வெளிவந்து ஓய்வெடுக்க வேண்டும் என்பது எனது விருப்பமல்ல. ஆனால், கொஞ்சம், கொஞ்சமாக அதில் இருந்து அப்பா வெளியே வருவார். அவர் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக