ராய் லட்சுமி தனி ஆள் இல்லை: அவர் பின்னால் இருப்பது யார் தெரியுமோ?
தான் நடிக்க வந்ததில் இருந்து தனக்கு பின்னால் துணையாக இருப்பது யார் என்று தெரிவித்துள்ளார் ராய் லட்சுமி.
கற்க கசடற படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் லட்சுமி ராய். நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு முன்னணி நடிகை என்த அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை.இந்நிலையில் அவர் திரையுலகம் பற்றி கூறியிருப்பதாவது,
பெரிய ஹீரோவின் படம் மூலம் அறிமுகமாகி பெரிய பிரேக் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். நான் அப்படித் தான் ஆசைப்பட்டேன்.
என் 50வது படத்திற்கு ஹீரோயினை மையமாக வைத்து ஒரு கதையை தேடியபோது நான் எதிர்பார்த்தது போன்ற கதை கிடைத்தது. அதனால் தான் ஜூலி 2 படத்தில் நடித்தேன்.
எனக்கு எப்பொழுதுமே ஆதரவாக இருப்பவர் என் சகோதரி. என் குழந்தை பருவத்தில் இருந்து ஆதரவாக உள்ளார். சினிமா துறைக்கு நான் வந்ததும் அவர் என் முதுகெலும்பு போன்று ஆகிவிட்டார்.பெற்றோர் இருந்தாலும் எதுவாக இருந்தாலும் ஒரு கால் செய்தால் போதும் என் சகோதரி பார்த்துக் கொள்வார் என்றார் ராய் லட்சுமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக