செவ்வாய், 12 ஜூன், 2018

வரலக்ஷ்மி நடிக்கும் வெல்வெட் நகரம் படத்தின் மோசன் போஸ்டரில் நீங்கள் கவனிக்க வேண்டியவை

வரலக்ஷ்மி நடிக்கும் வெல்வெட் நகரம் படத்தின் மோசன் போஸ்டரில் நீங்கள் கவனிக்க வேண்டியவை


வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் வெல்வெட் நகரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோசன் போஸ்டர் வெளியாகி உள்ளது. மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலக்ஷ்மி நடிக்கும் படம் தான் வெல்வெட் நகரம். தலைப்பே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதேபோல் தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் செம வித்தியாசமாக இருக்கிறது.
இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தான் வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதியுடன் படத்தின் இயக்குனர், வரலக்ஷ்மி, படத்தின் குழு அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சரி, நாம் போஸ்டருக்கு வருவோம்.
போஸ்டரில் வரலக்ஷ்மி செம டிஃப்பரன்டாக இருக்கிறார். மோசன் போஸ்டர் ஸ்டார்ட்டாகும் போதே ஒரு பெண் வந்து நிற்பது போல் இருக்கிறது. அப்படியே ஸ்லோ மோசனில் காட்டுகிறார்கள். ஒரு ஃப்ளைட் பறக்கிறது; புத்தாண்டுக் கொண்டாட்டம் போல் பட்டாசு எல்லாம் வெடிக்கிறது; போஸ்டரை பார்க்கும்போதே கலர்ஃபுல்லாக இருக்கிறது.
இப்போது நம் தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தும் படங்கள் எல்லாம் வர ஆரம்பித்து இருக்கிறது. கடந்த வருடம் அறம், அருவி என இந்த வரிசையில் வரலக்ஷ்மிக்கு இந்த படம் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அருவியில் எப்படி நாம் ஒரு சூப்பரான போஸ்டரை பார்த்தோம்; இந்த போஸ்டரை பார்க்கும்போதே அட செமயா இருக்கிறதே என்று தான் தோன்றுகிறது.

போஸ்டரில் வரலக்ஷ்மியை பார்க்கும்போது மூன்று முகங்களாக பார்க்க முடிந்தது. பொதுவாகவே இந்த மூன்று முகம் யாருக்கு இருக்கும் என்றால் பிரம்மாவிற்கு இருக்கும். பெண் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி இருக்கும் படம் என்பதால் பெண்கள் ஒரு உயிரை உருவாக்குகிறார்கள்; படைக்கிறார்கள் இல்லையா இதை அடிப்படையாக கொண்டு கூட போஸ்டரில் ஹைலைட்டாக தெரிய வேண்டும் என இயக்குனரும், படக் குழுவும் திட்டமிட்டு வைத்து இருக்கலாம்.

வரலக்ஷ்மியின் முகத்தில் நிறைய வரைந்து இருக்கிறார்கள். அவர்களின் பற்களும், கண்களும் நீல நிறத்தில் இருக்குமாம். கீழே "தேர் இஸ் நோ ஸச் திங்க்ஸ் அஸ் கோயின்சிடன்ஸ்" என போட்டு உள்ளனர். படத்தின் பெயர் வெல்வெட் நகரம். அதனால், இது ஒரு த்ரில்லர் பேஸ்டு படமாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக