பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட கதையில் அஜித் 2020 ரிலீஸ் உறுதியான தகவல்
அஜித் நடிக்க, விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ராஜராஜ சோழன் எனும் சரித்திரக் கதையை உருவாக்குவது உறுதி என்று தெரிகிறது. எழுத்துச்சித்தர் பாலகுமாரன், சோழர்களின் காலத்துக்கு இந்தக் கதைக்கான ஒன்லைன் ரெடிசெய்து கொடுத்திருக்கிறார்
.வாசகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவையாகவும் மனதையே புடம்போட்டதாகவும் வாழ்க்கையையே திசை திருப்பியதாகவுமான பல நாவல்களைப் படைத்திருக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக, தஞ்சைப் பெரிய கோயில், தஞ்சாவூர், கும்பகோணம் முதலான சோழ தேசத்தின் பல பகுதிகள் எனச் சென்று வந்தார். கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வுகள் மேற்கொண்டார். கல்வெட்டு ஆய்வாளர்கள், குடவாயில் பாலசுப்ரமணியம், டாக்டர் கலைக்கோவன் முதலான சரித்திர ஆய்வாளர்களுடன் சோழ தேசம் குறித்தும் ராஜராஜ சோழன் குறித்தும் கேட்டறிந்தார்.
கிட்டத்தட்ட தன் கனவுப் படைப்பாக, ராஜராஜ சோழனின் சரிதத்தையும் சோழர்களின் கலாச்சாரத்தையும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரத்துடன் நிற்கும் பெரியகோயில் எழுப்பப்பட்ட விதத்தையும் பிரமிக்கும் வகையில், உடையார் எனும் ஆறு பாகங்கள் கொண்ட நாவலைப் படைத்தார். சுமார் 1,500 பக்கங்கள் கொண்டது உடையார்.
கடைக்கு வந்ததுமே விற்றுத்தீர்ந்தன உடையார் புத்தகங்கள். நண்பர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள் பரிசாக உடையார் புத்தகங்களை வாங்கி அன்பளிக்காக வழங்கி மகிழ்ந்தார்கள் வாசகர்கள்.
வாசகர்களை மட்டுமின்றி, திரையுலகில் பலரையும் பாலகுமாரனின் உடையார் நூல், ஈர்த்தது. படித்துப் பார்க்க என்னவோ செய்தது. மொத்தக் கதைகளையும் எப்போதும் நம் கண்ணுக்கு எதிரே காட்சிப்படுத்திக் கொடுக்கிற எழுத்து பாலகுமாரனுடையது. அந்த விஷூவல், திரையுலகில் பலராலும் ரசிக்கப்பட்டது. இதில் மிக மிக ரசித்து லயித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்த்தன்.
அறிந்தும் அறியாமலும் மூலம் அறிமுகமாகி பட்டியல், பில்லா, ஆரம்பம் என அஜித்தின் மனதுக்கு நெருக்கமாகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன். உடையார் படித்துவிட்டு, எழுத்தாளர் பாலகுமாரனைச் சந்தித்தார். தன் ஆசையைச் சொன்னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக