காலா படத்தின் டிவிட்டர் விமர்சனம்...
பர்ஸ்ட் ஆப் மாஸ்... செகண்ட் ஆப் கிளாஸ்...
ரஜினியின் காலா படத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் டிவிட்டரில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள காலா படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில், இந்திய நேரப்படி நேற்றிரவே படம் ரிலீசாகி விட்டது.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் தங்களது விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் படம் சூப்பராக இருப்பதாக பாராட்டியுள்ளனர்.
இதோ சில டிவிட்டர் பதிவுகள்...
முதல் பாதி ரஜினி படம்:
2ம் பாதி ரஞ்சித் படம்:
காலா படத்தின் முதல் பாதி ரஜினி படங்களுக்கே உரிய மாஸ் எண்டர்டெயிண்மெண்ட். இரண்டாம் பாதி ரஞ்சித் படங்களுக்கே உரிய உணர்வுப்பூர்வமான காட்சிகள் உள்ளதாகவும், மொத்தத்தில் இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் சரியான விருந்து என்கிறார் இந்த ரசிகர்.
அரசியல் படம்:
சக்தி வாய்ந்த வசனங்கள்:
படத்தில் அரசியல் நெடி அதிகம் என்றும், சக்தி வாய்ந்த வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகவும், ரஜினியின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாகவும் இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.
கபாலியைவிட சூப்பர்:
கிளைமாக்ஸ் செம:
கபாலி படத்தைவிட காலா நன்றாக இருக்கிறது என்றும், அதிலும் குறிப்பாக கிளைமாக்சில் வரும் வண்ணமயமான பாடல் காட்சி வாவ் என்றும் இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
மாஸ் கிளாஸ்:
எல்லாமே சூப்பர்:
படையப்பாவிற்குப் பிறகு ரஜினிக்கு அமைந்த சிறந்த படம் காலா தான் என்கிறார் இந்த ரசிகர். மாஸ், கிளாஸ், கதை, நடிப்பு எல்லாமே நம்பர் ஒன் எனப் பாராட்டுகிறார் இவர்.
வில்லன் மாஸ்:
நானா படேகர்:
முதல் பாதியை விட இரண்டாம் பாதி சூப்பராக இருக்கிறது. குறிப்பாக நானா படேகரின் வில்லத்தனமும், ஈஸ்வரிராவ்வின் நடிப்பும் ஒவ்வொரு காட்சியிலும் அற்புதம் என்கிறார் இவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக