தாயான பின்பு இப்படி ஐட்டம் டான்ஸ் தேவையா? ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் காட்டமான பதில்!
1990களில் தமிழ் படங்களில் நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் நடிகைகஸ்தூரி.தற்போது ஒரு சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து வரும் இவர் ஊழலுக்கு எதிராக மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.சில சமயம் சமூக வலைத்தளங்களில் ஏதேனும் கருத்தை பதிவிட்டு அதன் மூலமும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் திட்டும் வாங்கி வருகிறார்.
கஸ்தூரி சமீப காலமாக படங்களில் ஒருபாடலுக்கு ஐட்டம் டான்ஸும் ஆடி வருகிறார்.அப்படி சமீபத்தில் வெளியான "தமிழ்ப்படம் 2" லும் ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கும் காட்சிகள் அந்த படத்தின் டீசரில் இடம் பெற்றிருந்தது.அதை பார்த்த ரசிகர் ஒருவர் தாயான பின்பும் ஐட்டம் டான்ஸ் ஆடுவது சரியா? என தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஒரு நடிகர் மது குடிப்பது போன்ற காட்சியில் ஏன் நடிக்கிறார்? கவர்ச்சியான நடனங்களில் ஆடுகிறார்,காதல் காட்சிகளில் ஏன் நடிக்கின்றார்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி எழுப்பி உள்ளோமா.அவர்களுக்கும் தான் குழந்தைகள் இருக்கின்றனர் என தனது கோபமான பதிவை பதிவிட்டுள்ளார்.
Thanks Engeyum Eppothum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக