நான் ஒன்னும் பேய்க்கு பொறக்கல.,போடா மூடிக்கிட்டு .,கடுப்பாகி பதிலடி கொடுத்த கஸ்தூரி .,தொடரும் காரசாரமான மோதல்..!
நான் ஒன்னும் பேய்க்கு பொறக்கல.,போடா மூடிக்கிட்டு .,கடுப்பாகி பதிலடி கொடுத்த கஸ்தூரி .,
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்தசாமி2 படத்தின் டிரெய்லர் தொடர்பாக நடிகை கஸ்தூரிக்கும், விக்ரமின் ரசிகர்களுக்கும் டிவிட்டரில் காரசாரமான மோதல் எழுந்துள்ளது.
நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பல கருத்துகளை மிகவும் வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி சில படங்களையும் நடிகர்களையும் மட்டுமில்லாமல் அரசியல் பிரமுகர்களையும் சிறிதும் தயக்கமின்றி கண்டமேனிக்கு விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் ஹரி இயக்கியுள்ள விக்ரம் நடிப்பில் வெளிவரவுள்ள சாமி 2 படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியானது.
இந்த படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கஸ்தூரி “முந்தா நாளு வந்த டீஸர் ல கலாய்ச்சிருந்த அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு ட்ரைலெர். ஸ்ஸ்ஸப்பா !” என ஒரு பதிவை இட்டிருந்தார்.
இதைக்கண்டு கோபமடைந்த ஒரு விக்ரம் ரசிகர் ‘முதலில் நீங்கள் உங்கள் வயசுக்கேத்த மாதிரி நடியுங்கள்.பேரன் பேத்திலாம் டிவி பாக்குற வயசுல நீங்க கூட ஐயிட்டம் டான்ஸ்லாம் ஆடுறீங்கள்’ எனக்கூறி அவரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.
இதற்கு “சொந்த பொண்ணை விட சின்ன வயசு பொண்ணோட டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா? அந்த அளவு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல, பூதம் இல்ல. போடா மூடிக்கிட்டு” என காட்டமாக பதிலடி கொடுத்தார்.
முந்தா நாளு வந்த டீஸர் ல கலாய்ச்சிருந்த .அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு ட்ரைலெர். ஸ்ஸ்ஸப்பா !— kasturi shankar (@KasthuriShankar) 3 June 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக