கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் பரியேறும் பெருமாள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நீலம் புரொடக்ஷன்ஸ்ன் என்ற பெயரில் பா.ரஞ்சித் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’.

மாரி செல்வராஜ் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தூத்துக்குடி மாவட்டத்தின் கதைக் களத்தில் உருவாகியுள்ள ,இந்த திரைப்படம் சட்டக் கல்லூரிகளில் நிகழும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரை காண கீழே கிளிக் செய்யவும்.

டீஸர் பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக