எரும சாணி ஹரிஜாவின் திருமண புகைப்படங்கள்
திரைப்படம், சீரியல் தவிர்த்து யூடியூப் வீடியோக்கள் மூலமும் பலர் பிரபலமாகி வருகின்றனர். அப்படி பிரபலமானவர்தான் ஹரிஜா.
அந்த வகையில் நகைச்சுவையை மையமாக வைத்து உருவானது தான் யூ டியூப் சேனலான ‘எருமை சாணி’. என்னதான் அறுவெறுப்பாக இருந்தாலும் மக்கள் அந்த சேனல் மட்டுமல்லாமல், அதில் நடித்த பலரின் ரசிகர்களாக மாறிவிட்டனர்.
இவர் ‘எரும சாணி ‘என்ற யூடியூப் சேனலின் கதாநாயகியாக வலம் வந்தவர். அது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பு பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
தற்போது இவர் யூடியூப்பை தாண்டி அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் ‘எருமை சாணி’ டீமான விஜய், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ புகழ் கோபி – சுதாகர், ஷாரா, அகஸ்டின் என யூ-டியூப் நட்சத்திரங்கள் பலர் நடிக்கின்றனர். கௌசிக் கிரீஸ் இசையமைக்கவுள்ள இதற்கு ஜோஸ்வா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
தற்போது இந்த படம் வெளியாகாத நிலையில், ஹரிஜாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஹரிஜாவுக்கும் அவரது காதலர் அமர் என்பவருக்கும் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடைய திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இவரின் திருமணத்துக்கு உங்களின் வாழ்த்து செய்தி என்ன? உங்கள் பதிலை கமெண்ட் பாக்ஸ்ல் தெரிவியுங்கள். மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக