காலா விமர்சனம்
காலா - படம் ஓ.கே.
-------------------------
காலா படம் எப்படி இருக்கிறது? ரசிகர் விமர்சனம் இதோ!
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே நாளை காலா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதனிடையே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இன்றே திரைப்படம் ரிலீஸ் ஆக துவங்கியுள்ளது. திரைப்படத்தை பார்த்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சை சேர்ந்த, உமைர் சந்து எழுதியனுப்பிய விமர்சனம்:
ஸ்டைல் கிங் ரஜினிகாந்த்தும், வளரும் இயக்குநர் பா.ரஞ்சித்தும் இணைந்துள்ள படம் காலா. இந்த காம்போ படத்தை காப்பாற்றியதா என்பதை பார்க்கலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் பாடி லேங்குவேஜ், ஸ்டைலிஷ் லுக், டயலாக் டெலிவரி மிஸ் ஆகியுள்ளது. இப்போதுள்ள மல்டிபிளக்ஸ் ரசிகர்கள் மனநிலையை கருத்தில் கொண்டு, ரஜினிகாந்த்தை பா.ரஞ்சித் கையாண்டுள்ளார்.
ரஜினியின் புகழ்பெற்ற டச்களை விட்டுவிடாமலும், இப்போதைய ரசிகர்களை திருப்திப்படுத்தவும் ரஞ்சித் முயன்றுள்ளார். ஆனாலும், எல்லா ரஜினி படங்களை போலவே, இதிலும் ரஜினி மட்டுமே முன்னணியில் நிற்கிறார்.
டெக்னிக்கலாக காலா சிறப்பாக உள்ளது. முதலுக்கு மோசமில்லாத திரைக்கதை. ஜில்லிட வைக்கும் சண்டை காட்சிகள், கண்கவரும் நடன அமைப்புகள் உள்ளன. பெரும்பாலும் குடிசை பகுதிகள் பின்னணி கொண்ட கதை அமைப்பில், கலை வேலைப்பாடுகள் சபாஷ் போட வைக்கின்றன. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. எடிட்டிங்கும் ஷார்ப்பாக உள்ளது.
நானே பட்கர் நடிப்பும் பாராட்டும் விதத்தில் உள்ளது. ரஜினிகாந்த்துக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமையும் வாய்ப்பு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக