ஞாயிறு, 3 ஜூன், 2018

தமிழ்ப்படம் 2.O டீசரில் கலாய்க்கபட்ட 24 படங்கள் - மொத்த விவரம் இதோ...

தமிழ்ப்படம் 2.O டீசரில் கலாய்க்கபட்ட 24 படங்கள் - மொத்த விவரம் இதோ...

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தமிழ்ப்படம்.இத்திரைப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்தார். சிவா கதாநாயகனாகவும் திசா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நகைச்சுவைப் படமான இதில் வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோரும் நடித்தனர். கண்ணன் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.இந்த படத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களை கலாய்த்திருந்தனர்.இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
சிவா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'தமிழ் படம் 2.0 பிற தமிழ்படங்களை கலாய்த்து உருவாகி மாபெரும் வெற்றிப்பெற்ற தமிழ் படம் இரண்டாம் பாகமான இதன் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
அரசியல், சினிமா, டிவி நிகழ்ச்சி என தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளையும் கலாய்திருக்கும் இந்த பட டீசரின் ஒவ்வொரு பிரேமிலும் ஒரு திரைப்படம் தென்படுகிறது.
அவ்வளவு சீக்கிரம் கண்ணில் தென்பட்டுவிடாத அந்த நுண்ணிய திரைப்பட தகவல்களின் புகைப்பட தொகுப்பு இதோ.
விக்ரம் வேதா
நீதானே என் பொன்வசந்தம்
வேலையில்லா பட்டதாரி
ஆயுத எழுத்து
ஆம்பள
மங்காத்தா
துப்பறிவாளன்
விவேகம்
ஹனிபல் லெக்டர்
24
காட் ஃபாதர்
ஆழ்வார்
அமைதிப்படை
எந்திரன்
வீரம்
மல்லையா
MS தோனி
ஜென்டில் மேன்
மெர்சல்
மான்கராத்தே
பன்னீர் செல்வம்
விஷால்
பிக்பாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக